search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது மோதிய சொகுசு காரில்  550 கிலோ குட்கா
    X

    விபத்தில் சிக்கிய காரில் இருந்து குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதை படத்தில் காணலாம்.

    லாரி மீது மோதிய சொகுசு காரில் 550 கிலோ குட்கா

    • சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம் :

    சேலம் கொண்ட லாம்பட்டி ரவுண்டானா சென்னை பைபாஸ் சாலையில் உளள திவ்யா தியேட்டர் அருகே இன்று அதிகாலை 5 மணிக்கு சீலநாயக்கன்பட்டி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து நடந்த உடன் காரில் வந்தவர்கள் இறங்கி ஓடி விட்டனர்.இரவு ரோந்து பணியில் இருந்த கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    பின்னர் காரில் சோதனை மேற்கொண்ட போது மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் எடுத்துச் சென்று மூட்டைகளை பரிசோதனை செய்தபோது 550 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து காரின் பதிவு எண்ணை கொண்டு காரின் உரிமையாளர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், இந்த குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது?,என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×