என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் 541 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- ரூ.12.33 லட்சம் வெளிநாட்டு கரன்சியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை
- குடல் பகுதியில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிப்பு.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 25.11.2022 அன்று துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 66 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நடத்ப்பட்ட சோதனையின்போது, குடலுக்குள் பசை வடிவில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 5 தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்ற பட்ட தங்கத்தின் மதிப்பு 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும்.
இதேபோல் 21.11.2022 அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த நபரின் உடைமைகள் மற்றும் குடல் பகுதியில் இருந்து 12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி இருப்பது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






