என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 5 பேர் கைது
- அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டல்.
- 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாரிக்குளம் சுடுகாட்டில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி அந்த வழியாக சென்ற பொது மக்களை மிரட்டி அச்சுறுத்தி கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் காட்டி மிரட்டிய தஞ்சை விளார் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 30), மோகன் (42), அண்ணா நகரை சேர்ந்த கதிரவன் (30), மூலை அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினகுமார் (40), ரவிச்சந்திரன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






