search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்   வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு  டி.ஐ.ஜி  தலைமையில் 21 குண்டு முழங்க அஞ்சலி
    X

    வீரவணக்க நாளையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழுப்புரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி தலைமையில் 21 குண்டு முழங்க அஞ்சலி

    • திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
    • டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழுப்புரம் :

    பணி காலத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்து இருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

    கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு பணிகாலத்தில் 261 பேர் உயிர் நீத்துள்ளனர்.அதில்தமிழகத்தில் மூன்று பேர் உயிர் நீத்துள்ளனர்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடிய கள்ளவர்களை பிடிக்கச் சென்ற பொழுது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவர் உட்பட 2 கவாலர் வீர மரணம் அடைந்துள்ளனர். தியாகத்தை நினைவு போற்றும் வகையில் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,இவரைத் தொடர்ந்து ஏடி.எஸ்.பிக்கள் கோவிந்தராஜ், தேவராஜ், டிஎஸ்பிக்கள் பார்த்திபன், ஜனகராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் ரேவதி, தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 'பின்னர் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு விண்ணை பிளக்கும் வண்ணம் 21 குண்டுகள் 3 முறை முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×