என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
நெல்லையில் மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
By
மாலை மலர்3 Jun 2022 10:13 AM GMT (Updated: 3 Jun 2022 10:13 AM GMT)

பாளை சீவலப்பேரி அருகே வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளை சீவலப்பேரி உலகம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொள்ளமுத்து. ஆட்டோ டிரைவர். இவரது மகன் முண்டசாமி(வயது 29).
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முண்டசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்றும் அவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த முண்டசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story
×