என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிரேமலதா விஜயகாந்த்
  X
  பிரேமலதா விஜயகாந்த்

  ஈரோட்டில் இன்று மாலை பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து பிரேமலதா ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
  ஈரோடு:

  தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்துறையினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

  அதன்படி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க சார்பில் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
  Next Story
  ×