search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
    X
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பிரதமரிடம் தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவோம் - அண்ணாமலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

    பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.

    நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

    3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. பிறகு, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் லாஜிஸ்டிக் நோடல் பார்க்கை சென்னை துறைமுகம் பகுதியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1162 பேருக்கு லைட் அவுஸ் மாடல் வீடுகள் வழங்கப்படுகிறது.

    மிக முக்கியமான விஷயங்கள் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம். தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்
    Next Story
    ×