search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெடிகுண்டு மிரட்டல்
    X
    வெடிகுண்டு மிரட்டல்

    கோவை மத்திய ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் தாயுடன் தலைமறைவு

    கோவை மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் தாயுடன் தலைமறைவான சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதி, விசாரணை கைதி என 1,850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி ஜெயில் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் ஜெயிலில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனைடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஜெயிலில் வால்மேடு பிளாக், தொழிற்கூடம், கைதிகள் அறை, ஆஸ்பத்திரி, தோட்டம் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவி கொண்டு சோதனை நடத்தினர்.ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கைதிகள் 1850 பேர் பாதுகாப்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து ஜெயிலர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். அவர் பேசிய செல்போன் எண் வைத்து விசாரித்தனர்.

    அப்போது அந்த நபர் திருப்பூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த நாகராஜ் (37) என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ் மது போதையில் ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

    அவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருப்பூர் சென்றனர். ஆனால் நாகராஜ் அங்கிருந்து தப்பி விட்டார். போலீசார் செல்போனில் அழைத்த போது அவர்களிடம் நாகராஜ் தொடர்ந்து பேசினார். பின்னர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    அவர் தனது தாயை தேடி எப்படியும் வீட்டிற்கு வருவார் என போலீசார் காத்திருந்த னர். ஆனால் போலீசில் சிக்காமல் நைசாக வீட்டிற்கு வந்த நாகராஜ் தனது தாயையுடன் தலைமறைவாகி விட்டார்.அவரது தாயின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே தாயுடன் தலைமறைவான நாகராஜை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×