search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டப் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.
    X
    குடிநீர் திட்டப் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணியில் மகத்தான சாதனை படைத்து வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புகழாரம்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியில் மகத்தான சாதனை படைத்து வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் சாத்தான்குளம் - உடன்குடி இணைப்பு சாலையில் அலங்கார தளக்கல் பதிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    வெங்கட்ராமாமானு ஜபுரம் ஊராட்சி உதிரமாடன்குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம், மற்றும் ரூ.1.25 லட்சத்தில் புதிய சிறுமின்விசை நீர்த்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.நேசபுரத்தில் ரூ.4.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

    நிறைவுற்ற இப்பணிகளை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். மேலும் உதிரமாடன்குடி யிருப்பில் ரூ.11.55 லட்சத்தில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம், கந்தபுரத்தில் ரூ. 5.50 லட்சத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அமைச்சர் நட்டினார். 
    பின்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்கள் பணி செய்வதில் மகத்தான சாதனை படைத்து வருகிறார். எங்களை  போன்றவர்களிடம்குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று நாங்களும் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம், 

    இப்படிப்பட்ட முதல்வருக்கு நாம் எப்போதும் என்றும் ஆதரவாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் பேசினார். 
    இந்நிகழ்ச்சிக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவி பாலசரஸ்வதி, துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், உடன் குடி கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியா பத்து ஊராட்சித் தலைவர் பாலமுருகன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மகாவிஷ்ணு, ராமஜெயம், ரவிராஜா, இளங்கோ, அலாவுதீன், ஜெயப்பிரகாஷ் உடன்குடி ஒன்றிய, நகர இளைஞரணி அமைப்பாளர்கள் பாய்ஸ், அஜய், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் நடராஜன், மாவட்ட காங்கிரஸ் கலை, இலக்கியப் பிரிவு தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×