என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
    X
    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    மலையாள பகவதி-பத்திரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

    திருமங்கலம் அருகே மலையாள பகவதி-பத்திரகாளியம்மன்கோ வில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    திருமங்கலம்
                
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தூம்பக்குளம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மலையாள பகவதி- பத்ரகாளியம்மன்கோவில் உள்ளது. இங்கு கும்பாபி ஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

    முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் தீப, தூப ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கோபுர கலசத்தில் உள்ள தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கோவில் ராஜகோபுரம் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேகத்தில் திருமங்கலம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பூஜைகளை பிள்ளை யார்பட்டி வேத சிவாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சாரியார் தலைமை யில் சிவாச்சாரியார்கள் செய்தனர். 

    மதுரை ஆதீனம் சுந்தர மூர்த்தி தம்பிரான் சுவாமி கள், கோயமுத்தூர் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தூம்பக்குளம் புதூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×