என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாஜக - திமுக
  X
  பாஜக - திமுக

  பா.ஜ.க. பக்கம் திரும்புகிறதா தி.மு.க.?- மாறும் அரசியல் சூழ்நிலையால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  பேரறிவாளன் விடுதலை  விவகாரத்தில் தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் அந்த கட்சியை கை கழுவிவிட்டு பா.ஜனதா பக்கம் திரும்புவதற்கு தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

  ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. தற்போதைய நிலையில் பா.ஜனதாவுக்கு 9,194 வாக்குகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

  இதனால் சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முயற்சித்து வருகிறது.

  இந்த சூழலில்தான் வருகிற 28-ந்தேதி கருணாநிதி சிலையை திறக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் ஒத்துக்கொண்டு உள்ளார்.

  ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு கொண்ட அவரை கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும் அதை அவர் ஏற்றுக் கொண்டதும் தி.மு.க.- பா.ஜனதா இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

  தற்போது வெங்கையா நாயுடு ஊட்டியில் ஓய்வு எடுத்து வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மலர் கண்காட்சியை திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஊட்டி சென்றுள்ளார். இருவரும் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  மாறி வரும் இந்த அரசியல் சூழ்நிலையால் பா.ஜனதா பக்கம் தி.மு.க. செல்லவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.


  Next Story
  ×