என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கச்சிமடத்தில் இன்று முதல் 2 நாட்கள் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தங்கச்சிமடம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதியில் 2000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாரத்திற்கு 3 நாள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
மீனவர்களுக்கு தமிழக அரசு மானிய டீசல் ஆக மாதத்திற்கு 1800 லிட்டர் வழங்குகிறது. இதை மாநில அரசு உயர்த்தி அவர்களுக்கு கூடுதலாக மானிய டீசல் வழங்க கோரியும், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலை விலையை உற்பத்தி விலைக்கே வழங்க கோரியும், இலங்கையில் படகுகள் சேதம் அடைந்து மூழ்கடிக்கப்பட்ட படகிற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட படகுளுக்கு மாநில அரசு வழங்கும் நிவாரணம் தொகை 5 லட்சத்தை உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
2 நாட்கள் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்ட களத்திற்கு அனைத்து மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசு ராஜா தலைமை வகித்தார். இதில் அனைத்து மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்துள்ளனர்.






