என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை யூனியன் கூட்டம் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடந்தது.
யூனியன் கூட்டம்
தேவகோட்டையில் யூனியன் கூட்டம் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியனின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேறார். துணைத் தலைவர் ராஜாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார்.
தலைவர் பேசுகையில், மத்திய-மாநில அரசுகளின் நிதிகள் மூலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 15வது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 92.66 லட்சத்தில் புதிய பணிகள் நடைபெற்ற உள்ளன என்றார்.
கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களின் வரவு-செலவு கணக்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர் ரவி பேசுகையில், புதிய ஒப்பந்ததாரர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் கவுன்சிலர்களை பார்க்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர் அடுத்த கூட்டத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
Next Story






