search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்குப்பதிவு
    X
    வழக்குப்பதிவு

    25 பேர் மீது வழக்கு

    பா.ஜனதா தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை

    பா.ஜ.க. மாநில ஆலோசனைக் குழு கூட்டம், மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க. மாநில ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களை வரவேற்று, மதுரை மாநகர்- புறநகர் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 50- க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு பதாகைகளை (‘பேனர்’) வைத்திருந்தனர்.

    இதற்காக அவர்கள் மாநகராட்சி மற்றும் மாநகர போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்ப டுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் போலீசாருடன் அழகர்கோவில் ரோட்டுக்கு வந்தனர். அங்கு பேனர்களை அகற்றும் பணி தொடங்கியது. இதனைக் கேள்விப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் ‘நாங்கள் வைத்திருக்கும் பேனர்களை நீங்கள் எப்படி அகற்றலாம்?’ என்று கேள்வி எழுப்பினர். 

    இதற்கு மாநகராட்சி அதிகாரிகள், ‘நீங்கள் இங்கு பேனர் வைக்க உரிய அனுமதி பெறவில்லை. நாங்கள் அந்த பேனர்களை அகற்ற உள்ளோம்’ என்றனர். 

    இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் வலுத்தது. போலீசார் கட்சித்தொண்டர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையே மாநகராட்சி ஊழியர்களின் பேனர் அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.
    ஆத்திரம் அடைந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியர்களை தள்ளிவிட முயன்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவா கவும் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. எனவே போலீ சார் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி னார்கள்.
    அப்போது ‘அழகர்கோவில் ரோட்டில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள விளம்பர பதாகைகளை ஒரு மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று போலீசார் கெடு விதித்தனர். 

    இதனை நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அழகர்கோவில் ரோட்டில், பா ஜனதா தொண்டர்களின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதற்கிடையே மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சரவணன் உள்பட 25 பேர் மீது அனுமதியின்றி பேனர் வைத்தது, கொரோனா நேரத்தில் கும்பலாக கூடி நின்றது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
    Next Story
    ×