என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னை மாநகர் முழுவதும் செல்போன் சேவையில் திடீர் பாதிப்பு

    மின் தடை மற்றும் செல்போன் தொடர்புகள் துண்டிப்பு போன்றவற்றால் சென்னை மாநகர் முழுவதும் மக்கள் சிறிது நேரம் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலையில் லேசாக தூற தொடங்கிய மழை பின்னர் பல இடங்களில் பலத்த மழையாக மாறியது. மழையுடன் மின் தடையும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் செல்போன் சேவை திடீரென முடங்கியது.

    நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவருக்கொருவர் போனில் பேச முடியாமலும் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடியாமலும் மக்கள் கடும் அவதிக்குள்னார்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வெளியிடங்களில் இருந்த தங்களது ஊழியர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவித்தனர்.

    சுமார் 30 நிமிடங்கள் வரையில் செல்போன் சேவையில் பாதிப்பு நீடித்தது. பின்னர் படிப்படியாக செல்போன் சேவை சீரானது. மின் தடை மற்றும் செல்போன் தொடர்புகள் துண்டிப்பு போன்றவற்றால் சென்னை மாநகர் முழுவதும் மக்கள் சிறிது நேரம் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது.

    இதையும் படியுங்கள்... சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழை

    Next Story
    ×