search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு தணிக்கையாளர்கள் 2 கட்ட போராட்ட அறிவிப்பு

    தமிழகம் முழுவதும் கூட்டுறவு தணிக்கையாளர்கள் 2 கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
    நாமக்கல்:

    தமிழ்நாடு கூட்டு றவுதணிக்கைத்துறை அலுவலர் சங்கத்தின் மே தினக் கூட்டம் மற்றும் சிறப்பு செயற்குழு கூட்டம் 1-ந் தேதி நடைபெற்றது.  நாமக்கல் மாவட்ட தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.  மாவட்ட துணைத்தலைவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார். 

    கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் செல்வம், முன்னாள் பொதுச் செயலாளர் பச்சையப்பன், முன்னாள் மாநில தலைவர் திருவேங்கடப்பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

    இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், மாநில பொருளாளர் துரைக்கண்ணன், மாநில துணைத் தலைவர் காளியப்பன், மாநில துணைத் தலைவர் பெரியசாமி, தலைமை நிலைய செயலாளர் அருணாச்சலம், சட்டப்பிரிவு செயலாளர்கள் செந்தில்நாதன்,  வெங்கடாசலபதி, வெளியீட்டு பிரிவு செயலாளர்கள் அன்வர்தீன்,  சுந்தந்திரமணி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காங்காலட்சுமி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்தும் தலைவர் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசி–னார்கள்.

    கூட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பதவி உயர்வு பட்டியல் 9 மாதங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தி 2021 ஜூலையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவேண்டும். தமிழக அரசின் நகைகடன் தள்ளுபடி திட்டத்திற்காக பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணி செய்த தணிக்கையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் சிறப்பு படி மற்றும் பயணப்படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2 கட்ட போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.  வருகிற 9-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றவும், 13-ந் தேதி அன்று சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
    Next Story
    ×