என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஈரோட்டில் சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற என்ஜினீயர்

    ஈரோட்டில் சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பிரிவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). விவசாயி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிக்குமார்(37) என்ற மகனும் உள்ளனர். இதில் பிரியதர்ஷினி திருமணமாகி கணவருடன் வசித்துவருகிறார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ரவிக்குமார் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ரவிக்குமார் தந்தையிடம் சொத்தை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தந்தை மீது ஏற்கனவே ரவிக்குமார் கோபத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தை பழனிச்சாமியிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிச்சாமியை பலமாக தாக்கியுள்ளார். பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரவிக்குமார் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தனது தாயை மிரட்டி அங்கிருந்து சென்று விட்டார்.

    ருக்குமணி தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார். நள்ளிரவு 2 மணி அளவில் ருக்குமணி கணவரை எழுப்பி உள்ளார். ஆனால் பழனிச்சாமி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ருக்குமணி இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர்கள் விஜயா, சோமசுந்தரம் ஆகியோரும் உடனிருந்தனர்.மோப்பநாய் ஜெரி வரவழைக்கப்பட்டது.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த செய்தி அக்கம்பக்கத்தில் பரவியதும் பழனிச்சாமி வீட்டு முன்பு ஏராளமானோர் திரண்டு விட்டனர். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனிச்சாமியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவிக்குமாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×