என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழிப்புணர்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
  X
  விழிப்புணர்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

  பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டத்தில் பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  நெல்லை:

  நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தர வின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜூ மேற்பார்வையில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் போலீசாருக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

  சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்றும், எப்படி ஏமாறாமல் இருப்பது என்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  அப்போது பயிற்சி காவ லர்களுக்கு செல்போனில் வரும் தேவையில்லாத லிங்கை தொடவேண்டாம் என்றும், வங்கி கணக்கு பற்றி கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும், ஆன்லைன் விளையாட்டு மூலம் அதிக பண மோசடி ஏற்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

  மேலும் இணையதளம் மூலம் நிதி மோசடி, சமூக வலைதளங்களை எப்படி கையாளுவது என்பது பற்றி பயிற்சி காவலர்களிடம் கலந்துரையாடினர். பின் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து https://cybercrime.gov.in/ என்ற இணையம் வழியாகவும், 1930 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
  Next Story
  ×