என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவினாசியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய திட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரூ. 241 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுக்கு முன் புதிய குடிநீர் திட்டப்பணி துவங்கி கடந்த பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.
    அவிநாசி:

    18 வார்டுகளை உள்ளடக்கிய அவிநாசி பேரூராட்சியில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து இரண்டாம், மூன்றாம் குடிநீர் திட்டங்களின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

    இதில் 2-ம் குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி, 14 லட்சம் லிட்டர், 3-வது திட்டத்தில் இருந்து தினசரி 11 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் நீராதாரப் பகுதியில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை, வினியோக குழாய் உடைப்பு, நீரேற்ற நிலையங்களில் மோட்டார் பழுது என பல காரணங்களால், நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், பாதியளவு தான் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இதனால் கோடைக்காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதுமே தண்ணீருக்கு தவிக்கும் நிலை அவிநாசி மக்களுக்கு ஏற்பட்டது. வீடுகளுக்கு 15 நாள் இடைவெளியில் தான் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மக்கள் தண்ணீருக்கு அலைமோதினர்.

    இந்நிலையில் அன்னூர், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படை தளம் உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி ரூ. 241 கோடி செலவில், கடந்த 2 ஆண்டுக்கு முன் புதிய குடிநீர் திட்டப்பணி துவங்கி கடந்த பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.

    இதனால் வீடுகளுக்கு  3 நாளுக்கு ஒருமுறை தடையின்றி தண்ணீர் சப்ளையாகிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனால் கோடை வறட்சி, அவிநாசி மக்களுக்கு வராது என்றே சொல்லலாம்

    அவிநாசியின் 2035ம் ஆண்டைய மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட இடங்களில் பெய்யும் மழைநீர் தான் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. 

    நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பருவமழை, கோடை மழையால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலையில் பெருக்கெடுத்து பவானி ஆற்றில் சங்கமிக்கிறது. அந்த தண்ணீரை மையப்படுத்திதான் பல்வேறு திட்டங்களின் கீழ் அவிநாசி மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
    Next Story
    ×