search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்

    அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.12 ந்தேதி சாமி மஞ்சள் நீர் விழா மற்றும் சாமி புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. நாள்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வரும் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். 12-ந் தேதி சாமி மஞ்சள் நீர் விழா மற்றும் சாமி புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினசரி இரவு 10 மணி அளவில் திரு கம்பத்தில் பூவோடு வைத்தல், சாமி அழைப்பது ஆகியன நடைபெறுகிறது.

    மே மாதம் 11 ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப ரதத்தில் மாரியம்மன் எழுந்தருள்கிறார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே மாதம் 10 ந்தேதி சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது. 12 மற்றும் 13 -ந் தேதிகளில்  இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×