search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 19 போலீஸ் நிலையங்களுக்கு ஸ்கூட்டர்கள்

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    திருப்பூர்:
     
    மத்திய அரசின் நிர்பயா திட்ட நிதியின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க 181 என்ற உதவி எண் கொடுக்கப்பட்டுள்ளன. 

    இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். இந்த சேவை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 19 போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் 2 பெண் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

    புகார்கள் வந்ததும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று அங்கு விசாரணை நடத்தி உடனடியாக புகார்களை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் 19 போலீஸ் நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தலா ஒரு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதற்காக பெண் போலீசார் தனித்தனியாக நியமிக்கப்பட்டனர். பணி மாறுதல் உள்ளிட்டவைகளால் போலீசார் மாறி சென்றதால் தற்போது புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

    இந்தநிலையில் 19 போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த ஸ்கூட்டர்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    அந்த வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆய்வு செய்தார். பின்னர் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் தனித்தனியாக பெண் போலீசாரை புதிதாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×