என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    பெருந்துறை விடுதியில் தங்கி படித்த பண்ருட்டி மாணவர் மாயம்

    பெருந்துறை விடுதியில் தங்கி படித்த 10-ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை-பவானி ரோடு, சோளிபாளையம் பகுதியில் சாகர் இண்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த உக்கரவேல் என்பவரது மகன் கலையமுதன் (வயது 16) 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் இப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் மதியம் முதல் மாணவர் கலையமுதனை காணவில்லை.

    இதையடுத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் சுந்தர்ராஜன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவரை தேடி வருகிறார். பள்ளியில் தங்கி படித்த மாணவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×