என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொ
மேலாண்மை குழு தலைவர்-உறுப்பினர்கள் தேர்வு
மதுரையில் மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்புரம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
குழந்தைகளின் வளர்ச்சியில் பள்ளி கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக குழந்தைகள் தொடக்க கல்வியில் பெறும் கல்வியறிவே அவர்கள் ஒட்டுமொத்த கல்விகற்கும் ஆற்றலுக்கு அடித்தளமாக விளங்குகின்றது.
இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அரசு பள்ளிகளின் முன் னேற்றத்திற்காகவும், வளர்ச் சிக்காவும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட ம் 2009ன்படி பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்க உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுக்களில், பெற்றோர், பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் களின் பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும் அரசு பள்ளி களை மேம்படுத்துவதற்கும் பெற்றோர்களின் பங்களிப்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும்.
மேலும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் கல்வி இடைநிற்றலை தவிர்த்தல், மதிய உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல், கற்றல் கற்பித்தல் முறை, பள்ளியின் தேவைகளை கண்டறிந்து பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், பள்ளிகளில் நிதி தொடர்பான வழிகாட்டுதல், ஆண்டு நிதிநிலை அறிக்கை தயார் செய்தல், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் பள்ளி மேலாண்மைகுழு பிரதிநிதிகள், பெற்றோர்களுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஷ்வரி, ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






