என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சி.
    X
    பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சி.

    சேலத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என ஏற்கனவே மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில் இன்று மாநகர நல அலுவலர் மரு.என். யோகானந் சூரமங்கலம் மற்றும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகள், செவ்வாய்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். 

    அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டு சுமார் 1 டன் அளவிளான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

     தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    ஆய்வின் போது சுகாதார அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடன் சென்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×