என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மானூர் அருகே வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
மானூர் அருகே வாலிபரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 26). இவர் தினமும் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
காலை பார்த்த போது அதனை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story