என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகள்.
    X
    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகள்.

    மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை போக்கும் கருத்தரங்கு

    சாத்தான்குளம் பள்ளியில் மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் கருத்தரங்கு கருத்தரங்கு நடைபெற்றது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ செல்வி அறிவுறுத்தலின்படி சாத்தான்குளம் டி.என்.டி.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தேர்வு காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பயம், பதட்டம், மன அழுத்தத்தை போக்கும் கருத்தரங்கு மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் வைகுண்ட ரமணி, பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும், ரத்தசோகை நோயினாலேயே பெரும்பாலான மாணவ-மாணவிகள் சோர்வு, படபடப்பு, மயக்கத்திற்கு ஆளாகிறார்கள். 

    அதை போக்க முருங்கை இலை சூப், பீட்ரூட் சூப் அருந்த வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தினார்.

    மூலிகை கண்காட்சியை 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கண்டு பயன்பெற்றனர். 

    மூலிகைகளுக்கான மருத்துவ குணங்கள் சித்த மருத்துவ அலுவலரால் விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சித்தா பிரிவு மருந்தாளுனர் சந்திரமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆக்னஸ், வசந்த் ஜெபதுரை, ஆசிரியர்கள் ஜெரோம், ராஜேஷ், அதிசிங்கராஜன் மார்க்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×