என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தவறு செய்யும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை- எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி
தவறு செய்யும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சாய் சரண் தேஜஸ்வி பொறுப்பேற்றது முதல் மாவட்டம் குற்றங்களை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தவிர்க்க அதிரடி சோதனைகளை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படாமல் தடுக்கவும் அவர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நமது நிருபரிடம் கூறுகையில்,
காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வாரந்தோறும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறைத்தீர்ககும் கூட்டம் நடத்தப்படும். அதே போல டிஎஸ்பி அலுவலகத்தில் மாதந்தோறும் ஒரு நாள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்.
இதுவரை நிலுவையில் இருந்த 332 மனுக்கள் மீது தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரியை ஆகியவற்றை முழுவதுமாக தடுக்கப்பட்டு¢ள்ளன. யாரேனும் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீஸ் நிலையத்தில் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story






