என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    துறையூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

    துறையூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி துறையூர் வடக்கு அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியரின் மகன் லித்தீஸ் (வயது 3).

    இந்த சிறுவனை அவனின் தந்தை சுரேஷ் சைக்கிளில் பின் இருக்கையில் உட்கார வைத்துக்கொண்டு அருகில் உள்ள காளிப்பட்டி கிராமத்துக்கு சென்றார். அப்போது காளிப்பட்டி காலனி பகுதியில் சென்றபோது சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் தந்தையும் மகனும் கீழே விழுந்தனர்.

    சிறுவன் லித்திஸ் அந்த வழியாக செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் பின்பக்க சக்கரத்தில் வசமாக மாட்டிக் கொண்டான். அடுத்த வினாடி சக்கரம் அவன் மீது ஏறி தலைநசுங்கி இறந்தான்.

    சுரேஷ் லாரிக்கு அருகாமையில் விழுந்ததால் லேசான காயத்துடன் தப்பினார். இதுபற்றி துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் பொட்டியாபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சேட்டுவை(50) கைது செய்தனர். தந்தை கண் முன்பு 3 வயது சிறுவன் தலைநசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×