என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் மூழ்கி பலி

    நெல்லை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் கிணற்றில் மூழ்கி பலியானார் .
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள கீழநரிக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவரது மகள் தங்கம் என்ற தங்க துரைச்சி(வயது 23).

    பெருமாள்சாமி கேரளாவில் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்திற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். 

    நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள சுடலைமாடன் சுவாமி கோவில் கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற தங்கம் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.  

    இதனால் அவரது பெற்றோர் கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது தங்கம் கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கம் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என்று விசாரித்து வருகின்றனர்.

    தங்கம் குளித்துக் கொண்டிருக்கும்போது கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×