என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்த காட்சி.
    X
    கோவில்பட்டியில் ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்த காட்சி.

    கோவில்பட்டி தனி மாவட்டமாக வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் நிலைபாடு-துரை வைகோ பேட்டி

    கோவில்பட்டி தனி மாவட்டமாக வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் நிலைபாடு என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உள்ள யூனியன் கிளப்பில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ ஆலோசனை மேற்கொண்டார்.

    தீப்பெட்டி தொழிலுக்கு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் உதவிகள் குறித்தும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இருப்பதாகவும், தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பது மட்டுமின்றி, மத்திய அரசு மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் நேஷனல் தீப்பெட்டி சிறு உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், சாத்தூர் பகுதி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோடை காலங்களில் மின் தேவை என்பது அதிகமாக தேவைப்படுகிறது அது காலங்காலமாக நடைபெற்றுவரும் செயல். அதில் சவாலான பிரச்சினைகளும் உள்ளது. நேற்று அமைச்சர் இது சம்பந்தமாக கூறி விளக்கம் அளித்துள்ளார். அதன் காரணமாக கூட இருக்கலாம், வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு வராது என்பதுதான் என் நிலைப்பாடு.

    அதற்கான உற்பத்தியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே மின் தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. கோவில்பட்டி தனி மாவட்டமாக உருவாக வேண்டும் என்பதுதான் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கு நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணைத்தலைவர் கோபால்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனத்தலைவர் ராஜவேல், பொருளாளர் செல்வமோகன், கதிரவன், ஜோசப், ரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×