என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், கடந்த முறை விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற முறையில் மனு ஏற்கப்பட்டது என்கிற எண்ணிக்கை அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று விவசாயிகள் கடந்த முறை நாங்கள் வழங்கப்பட்ட மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மேலும் இது தொடர்பாக எங்களுக்கு எந்தவித கடிதமும் பெறவில்லை. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் மனு ஏற்கப்பட்டது என தெரிவித்தால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு என்ன நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளார்கள்.
மேலும் கடந்த காலங்களில் மனுக்கள் வழங்கினால் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தது குறித்து அதிகாரியிடம் இருந்து கடிதம் தரப்படும். ஆனால் தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என கூறி கலெக்டர் மற்றும் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீங்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக உங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும் விவசாயிகள் வழங்க கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய விவசாயிகளுக்கு தெரிய படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story