என் மலர்
உள்ளூர் செய்திகள்

தப்பி ஓட்டம்
போக்சோவில் கைதான சிறுவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
சிறுவன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அவரது குடியிருப்பு பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிறைக்காடு பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த சிறுமிக்கு போடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அப்போதுதான் சிறுமியை ஏமாற்றி சிறுவன் திருமணம் செய்து கொண்டது தெரிய வரவே போடி அனைத்து மகளிர் போலீசார் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்த அந்த சிறுவன் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்த மற்றொரு வழக்கில் விசாரணைக்காக மதுரையில் இருந்து போலீசார் தேனி மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணை முடிந்து அந்த சிறுவனை மதுரைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். தேனி ஆயுதப்படையைச் சேர்ந்த 3 காவலர்களின் தடுப்பையும் மீறி ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் சிறுவன் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டார்.
போலீசார் சிறுவனை துரத்தி பிடிக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த சிறுவன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் அவரது குடியிருப்பு பகுதியிலும் தீவிரமாக நோட்டமிட்டு தேடி வருகின்றனர்.

Next Story