search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம்.
    X
    தேரோட்டம்.

    மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம்

    மதுரை வாடிப்பட்டியில் மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டபழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன்&சுந்த ரேசுவரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். 

    அதுபோல் நேற்றுமுன்தினம் மீனாட்சி திருக்கல்யாணமும் நேற்றுஇரவு விடியவிடிய தேரோட்டமும் நடந்தது. 

    தேரோட்டத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமைதாங்கி தொடங்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். திருப்பணிக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். 
    தேரோட்டம் குலசேகரன்கோட்டை, மீனாட்சிஅம்மன் கோவிலில் தொடங்கி பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில் வழியாக ராம நாயக்கன்பட்டி, பேட்டை புதூர் தாதம்பட்டி, மேட்டு பெருமாள் நகர், யூனியன் ஆபீஸ் ரோடு, பஸ் நிலையம், லாலாபஜார், போடிநாயக்கன்பட்டி வாடிப்பட்டி வல்லபகணபதி நகர் வழியாக கோவிலை சென்றடைந்தது. 

    இதில் மீனாட்சியம்மன் சிவப்பு மற்றும் பச்சைபட்டு உடுத்தியும், சுந்தரேசுவரர் வெண்பட்டு உடுத்தியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விடியவிடிய நடந்த இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×