search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பால் சுமைப்பணிக்கு மாற்று ஏற்பாடு - அரிசி வியாபாரிகள் முடிவு

    கூட்டத்தில் காமராஜ் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அரிசி மண்டி வியாபாரிகள் மற்றும் சுமைப்பணி தொழிலாளர் மத்தியில், கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேறாமல் இழுபறியில் உள்ளது. கூலி உயர்வு உட்பட கோரிக்கையை வலியுறுத்தி வரும், 21-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை சுமைப்பணி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். 

    இந்நிலையில் திருப்பூர் அரிசி மண்டி வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் துரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதை கண்டிப்பது, சங்க உறுப்பினர்கள், தட்டுப்பாடின்றி அரிசி விற்பனை செய்ய ஏதுவாக ஆட்களை நியமிக்க வேண்டும். 

    வணிக பேரவை மளிகை கடைகள், மக்கள் வாங்கும் அரிசி மூட்டைகளை அவர்களே ஏற்றி கொள்ள சொல்வது, சங்க உறுப்பினர்கள், மாற்று ஏற்பாடு செய்த பிறகு சுமைப்பணி தொழிலாளர் இடையூறு செய்தால், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    முன்னதாக நடந்த வியாபாரிகள் சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில், காமராஜ் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை உள்ளிட்ட அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×