search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    குன்னூர் அருகே சுற்றி திரிந்த 9 யானைகள்- பொதுமக்கள் அச்சம்

    குன்னூர் அருகே உள்ள உலிக்கல் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் நீரோடை உள்ள பகுதிகளில் உலவி வருகின்றன.

    ஊட்டி:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குட்டிகளுடன் 9 யானைகள் வந்தன.

    இந்த யானைகள் கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டன. வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறைக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பையொட்டிய பகுதிகளிலேயே சுற்றி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக சுற்றிய காட்டு யானைகள் 3 குழுவாக பிரிந்து சின்னக்கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்தன.

    இந்த நிலையில் இந்த யானைகள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேர்ந்து நேற்று குன்னூர் அருகே உள்ள உலிக்கல் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் நீரோடை உள்ள பகுதிகளில் உலவி வருகின்றன.

    இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, யானைகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடாத வண்ணம் அந்த பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×