என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயில் நிறுவனம் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார்
    X
    ஆயில் நிறுவனம் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார்

    தொழிலாளர்கள் வன்முறை எதிரொலி- ஆயில் நிறுவனம் முன்பு 500 போலீசார் குவிப்பு

    தொழிலாளர்கள் வன்முறை எதிரொலியாக ஆயில் நிறுவனம் முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
    மொடக்குறிச்சி:

    எஸ்.கே.எம் ஆயில் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம் என்பவர் நேற்று இரவு நிறுவனத்துக்குள் டேக்கர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வட மாநிலத்தவர்கள் கும்பலாக சேர்ந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் போலீசாரையும் விரட்டி அடித்தனர்.

    இதில் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காயமடைந்தனர். 4 போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ஈரோடு, பவானி, பெருந்துறை சப்- டிவிசன்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    ஏ.டி.எஸ்.பிக்கள் பாலாஜி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×