search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 2வது வாரம் தாக்கல்

    2022-23-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி புதிய பட்ஜெட்டில் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், ஸ்மார்ட் சிட்டி போன்ற நகரை அழகுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்றனர்.

    அதனைத்தொடர்ந்து மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்றும் நாளையும் நடக்கிறது.

    15 மண்டலத்திற்கும் தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நாளை நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. எப்போதும் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உட னேயே
    சென்னை மாநகராட்சி
    பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதம் ஆகி வருகிறது.

    ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கான நிலைக்குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். புதிதாக தேர்வு செய்யப்படுகிற நிலைக்குழுவுடன் விவாதித்து மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

    ஏப்ரல் 2-வது வாரத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

    மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வருவாயை பெருக்குவதற்கான ஆதாரங்கள், மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம், மழைநீர் வடிகால்வாய் போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு பட்ஜெட் ரூ. 2,438 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மூலதன செலவினத்தை விட வருவாய் ரூ. 2,084 கோடியாக இருந்தது. நிதி பற்றாக்குறையின் நிலையில் கொரோனா மற்றும் மழை வெள்ளம் போன்றவற்றின் செலவினம் அதிகரித்தது.

    2022-23-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் தரமான சாலைகள், மழைநீர் வடிகால், ஸ்மார்ட் சிட்டி போன்ற நகரை அழகுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


    Next Story
    ×