search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுங்கச்சாவடி
    X
    சுங்கச்சாவடி

    ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூர், நல்லூர் சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    சென்னையில் வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த 2 சுங்கச்சாவடிகளும் இன்னும் அகற்றப்படவில்லை. அதே நேரத்தில் இந்த 2 சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூர், நல்லூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

    கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது. அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.45-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரிக்கிறது.

    இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை ஒரு முறை செல்ல ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.55 ஆக உயர்த்தப்பட உள்ளது. திரும்பி வருவதற்கு ரூ.70 ஆக இருந்த கட்டணம் ரூ.90 ஆக உயருகிறது.

    பஸ் மற்றும் டிரக்குகள் ஒருமுறை செல்ல ரூ.95 ஆக இருந்த கட்டணம் ரூ.125 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.145-ல் இருந்து ரூ.190 ஆக உயருகிறது. கனரக கட்டுமான எந்திரங்கள், மண் நகரும் உபகரணங்கள், 3 முதல் 6 அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூ.150 ஆக இருந்த கட்டணம் ரூ.195 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.230-ல் இருந்து ரூ.295 ஆக அதிகரிக்கிறது.

    7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.240 ஆக உயருகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.280-ல் இருந்து ரூ.360 ஆக உயருகிறது. அதாவது குறைந்தபட்சம் ரூ.5-ம் அதிகபட்சமாக ரூ.80 வரையும் கட்டணம் உயருகிறது.




    Next Story
    ×