என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு இன்று 2-வது நாளாக ஆஜராக வந்த ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு இன்று 2-வது நாளாக ஆஜராக வந்த ஓ.பன்னீர்செல்வம்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆஜர்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் சார்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜர் ஆகும்படி 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட அவர் ஆஜர் ஆகவில்லை.
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 75 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.

    இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    இந்த ஆணையத்தின் சார்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜர் ஆகும்படி 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட அவர் ஆஜர் ஆகவில்லை.

    9-வது முறையாக அனுப்பிய சம்மனை பெற்றுக்கொண்டு நேற்று முதல் நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    நேற்று அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார்.

    இன்று 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் ஆணைய வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். இன்றைக்குள் அவரிடம் விசாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×