search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பால பணிகள்
    X
    மேம்பால பணிகள்

    தமிழக பட்ஜெட்: மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை ரூ.5,770 கோடியில் நிறைவேற்றப்படும்

    மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.
    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

    மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.

    சென்னையில் வர்த்தக வளர்ச்சிக்கு உயிர்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை திட்டத்தை மீட்டெடுத்து நிறைவேற்றிட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

    இத்திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்டம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

    காட்டுப்பாக்கம் சந்திப்பு என்பது சென்னை-சித்தூர்- பெங்களூரு சாலை, மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி- குன்றத்தூர் - பல்லாவரம் சாலை போன்ற முக்கியச்சாலைகள் கூடும் இடமாகும்.

    இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.322 கோடி மதிப்பீட்டில், உயர்மட்ட சுற்றமைப்புடன் கூடிய சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன் முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×