search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி மரக்கன்று நாட்டினார்.
    X
    விழாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி மரக்கன்று நாட்டினார்.

    பள்ளக்குறிச்சி பஞ்சாயத்தில் மரக்கன்று நடும் விழா

    சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    சாத்தான்குளம்:-

    சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் சித்திராங்கதன் தலைமை தாங்கினார். 

    சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். யூனியன் கவுன்சிலர் சுதாகர் வரவேற்று பேசினார். 

    விழாவில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்கள் நட்டி வளர்க்க வேண்டும். மரம் நடுவது நமது கடமையாகும்.  சந்தோஷ படக்கூடிய விஷயம் மரம் வளர்ப்பு தான். நீங்கள் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும். 

    பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றுபல அடிப்படை வசதிகள் செய்ய நினைத்திருப்போம். இந்த அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும். 

    நீங்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எடுத்துக்கூறி மரம் நட்டி வளர்க்க வேண்டும். இதனை பொதுமக்கள் கடைபிடித்தால் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க முடியும்.
     
    இவ்வாறு அவர் கூறினார். 

    முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் 4 லட்சம் மரக்கன்றுகள் நட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சாத்தான்குளம் ஒன்றியத்தில் 35,000 மரக்கன்றுகள் நடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். 

    விழாவில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் சீதா, ராஜாத்தி அம்மாள், நிஷாந்தி, கீதா, தனபால், பிரபு, ஊர் பிரமுகர் செந்தில் உள்பட பஞ்சாயத்து அலுவலர்களும் பணியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

     கடந்த முறை பஞ்சாயத்தில் 5000 பனைமர கன்றுகள் நடப்பட்டுள்ளதாக  பஞ்சாயத்து தலைவர் சித்திராங்கதன் கூறினார். 

    முன்னதாக விழாவிற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அதிகாரிகள், பிரமுகர்களை பஞ்சாயத்துத் தலைவர் சித்திராங்கதன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். 

    பஞ்சாயத்து துணைத்தலைவர் டார்வின் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் ராஜேஷ் செய்திருந்தார்.
    Next Story
    ×