search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எச்.ராஜா
    X
    எச்.ராஜா

    கடினமான கால கட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

    கடினமான கால கட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக எச்.ராஜா கூறினார்.
    காரைக்குடி


    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்ததில்லை. அதை உடைத்து 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது.முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால் முஸ்லிம் பெண்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு உள்ளது. ராகுல்காந்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும்போது பல வகையான வேடங்களை போடுகிறார். அதனால் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.

    நாடு முழுவதும் பா.ஜ.க. அலை அடிக்கிறது. இதில் தமிழகம் மட்டும் தப்பித்துக் கொள்ள முடியாது.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள காங்கிரசிற்கு மக்கள் எச்சரிப்பதற்காக விழிப்புணர்வு மணி அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 எக்ஸ்ட்ரா லக்கேஜ் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. இவர்களை தூக்கி எறியாமல் காங்கிரசிற்கு இனிமேல் எதிர்காலம் கிடையாது. 

    காங்கிரசில் உள்ள 23 மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து காங்கிரசை எந்த மாதிரி கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்வார்கள் என்று நினைக்கின்றேன். 

    லவ் ஜிகாத் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. அதற்கு உதாரணம் மேலூர் சம்பவம் ஆகும். கடினமான காலகட்டத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. சாதாரண நாட்களில் தேர்தல் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×