என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பவர் டேபிள் கட்டண உயர்வு - 6வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
இரு சங்கங்களிடையே 6-வது சுற்று பேச்சு’சைமா’ அரங்கில் நடந்தது.
திருப்பூர்:
திருப்பூர் சைமா’ சங்கம் -பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் இடையே கட்டண உயர்வு நிர்ணயிக்க பேச்சு நடந்து வருகிறது. இரு சங்கங்களிடையே 6-வது சுற்று பேச்சு’சைமா’ அரங்கில் நடந்தது.
‘சைமா’ தரப்பில் துணை தலைவர் கோவிந்தப்பன், பொதுச் செயலாளர் பொன்னுசாமி, இணை செயலாளர் சசி அகர்வால், பவர்டேபிள் சங்கம் தரப்பில் செயலாளர் நந்தகோபால், துணை செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் பங்கேற்றனர்.
ஆடைக்கு ரகம் வாரியாக கட்டண உயர்வு நிர்ணயிக்கலாம். நீங்கள் எவ்வளவு ரூபாய் கட்டண உயர்வு எதிர்பார்க்கிறீர்கள் என்றனர் ‘சைமா’ தரப்பினர். ரகம் வாரியான கட்டண உயர்வு நிர்ணயத்துக்கு பவர்டேபிள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
Next Story






