search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை வீரமாத்தியம்மன் கோவில் விழாவில் நெல் குத்தும் நிகழ்ச்சி

    நடப்பாண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்களுக்கு சுத்தி செய்தல் மற்றும் பொதுப்பொங்கலுக்கு, நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    உடுமலை:

    உடுமலை வல்லக்குண்டாபுரத்தில் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொதுப்பொங்கலுக்கு நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை ஒன்றியம், கொடிங்கியம் ஊராட்சி வல்லக்குண்டாபுரத்தில், பாரம்பரிய முறைகளை பின்பற்றி வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    அதன்படி திருவிழாவுக்கு முன் தரிசு நிலத்தை சீர்படுத்தி, நீர் தெளிப்பார்கள். அவ்வாறு நீர் தெளிக்கப்படும் இடத்தில், குறிப்பிட்ட நாட்களில் செடிகள் முளைவிட்டதும், திருவிழா அறிவிக்கப்படும்.

    நடப்பாண்டு திருவிழா கடந்த 28-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பக்தர்களுக்கு சுத்தி செய்தல் மற்றும் பொதுப் பொங்கலுக்கு,நெல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 7 மணிக்கு கரும்பு எடுத்து வர செல்தல், இரவு7 மணிக்கு பொது பொங்கலும், தொடர்ந்து, வீரமாத்தியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.  

    இரவு 11 மணிக்கு செடிகள் முளைவிட்ட இடத்தில் கரும்பு பந்தலிட்டு, பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதற்கான  ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×