search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடுமாங்காய் சேகரிப்பு - மலைவாழ் மக்களுக்கு வனத்துறை அதிரடி உத்தரவு

    ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் வடுமாங்காய் சாகுபடி செய்யப்படுவது கிடையாது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்களில் பழங்குடியினர் வாழும் 14 செட்டில்மென்ட் பகுதிகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசிக்கின்றனர். வன உரிமை சட்டத்தின் கீழ் நிலப்பட்டா மற்றும் சிறுவனப்பொருட்கள் சேகரிப்பை அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    பழங்குடியினருக்கு சிறு வனப்பொருட்கள் சேகரிக்க அனுமதிக்கப்பட்டாலும் மரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் பலனை அனுபவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    தற்போது வனப்பகுதியின் ‘ஸ்பெஷல்’ எனப்படும் வடுமாங்காய் சீசன் துவங்கியுள்ளதால், பழங்குடியினர் பலரும் அவைகளை சேகரித்து விற்பனை செய்ய முற்பட்டு வருகின்றனர். இந்த மாங்காய்க்கு, சமவெளிப்பகுதியில், அதிக கிராக்கி உள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

    ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் வடுமாங்காய் சாகுபடி செய்யப்படுவது கிடையாது. இவ்வகை மாங்காய்கள் வனப்பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும், இயற்கையாகவே, மானாவாரியாக விளையக் கூடியது.

    தற்போது சீசன் துவங்கியுள்ளதால் பழங்குடியினர் பலரும், அவைகளை சேகரித்து வருகின்றனர். மரங்களை வெட்டியோ, மரக்கிளைகளை ஒடித்தோ வடுமாங்காய்களை சேகரம் செய்யக்கூடாது. அதனை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×