என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை யூனியன் கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசினார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 1040 வீடுகள் ஒதுக்கீடு
தேவகோட்டை ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 1040 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் பிர்லா கணேசன் தலைமை வகித்தார். ஆணையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசு நிதியுடன் ஒன்றியத்தில் 1040 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக 809 வீடுகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றியத்தில் 75 கிலோமீட்டர் அளவில் கிராமப்புறங்களில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
2021 டிசம்பர் மற்றும் 2022 ஜனவரி மாதங்களுக்கான வரவு செலவு கணக்குகளை மன்றத்தின் முன்வைத்த னர். முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஜெயங்கொண்ட விநாயகர் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அந்த கோவிலில் காலையில் சிறப்பு பூஜையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.
Next Story






