என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிமுக
சிவகாசி மாநகராட்சியில் வெற்றி பெற்ற 10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தி.மு.க.வில் சேர திட்டமா?
நாளை மறுநாள் (2-ந்தேதி) கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ள நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் எப்போது சிவகாசி திரும்புவார்கள்? என்பது மர்மமாக உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு முதன் முறையாக தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 24-யை வென்று தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று விட்டது. 11 வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
ஆனால் அதில் 10 பேர் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் தி.மு.க.வுக்கு தாவலாம் என கருத்து நிலவியது. இருப்பினும் 10 பேரும் ஆன்மீக தலங்களுக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. கும்பகோணம், திருநள்ளாறு பகுதிகளில் 10 பேரும் இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது.
ஆனால் இன்று அவர்கள் சென்னையில் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவரை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

நாளை மறுநாள் (2-ந்தேதி) கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ள நிலையில் இவர்கள் எப்போது சிவகாசி திரும்புவார்கள்? என்பது மர்மமாக உள்ளது.
இதையும் படியுங்கள்... ரஷியா-உக்ரைன் இன்று பேச்சுவார்த்தை: போர் முடிவுக்கு வருமா?
Next Story