என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போடியில் கண்மாயில் மூழ்கிய வாலிபரை 2வது நாளாக தேடும் பணி

    போடியில் கண்மாயில் மூழ்கிய வாலிபரை 2வது நாளாக தீவிரமாக தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே சில்லமரத் துப்பட்டி தியாகி அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது30). கூலித்தொழிலாளி. இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால்அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமாருக்கு நண்பர்கள் ஆறுதல் கூறினர்.

    சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் பெரியகண்மாயில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சதீஷ்குமார் திடீரென கண்மாயிக்குள் இறங்கி சென்றார். நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

    சதீஷ்குமார் கண்மாய் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர். இன்று 2வது நாளாக வாலிபரை தேடி வருகின்றனர்.

    அவர் தற்கொலை செய்வதற்காக கண்மாயில் இறங்கினாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×