என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடை பெறவில்லை - தமிழக பாஜக புகார்
வாக்குப் பதிவின் நடைபெற்ற முறைகேட்டை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது.
இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் புகார் ஆளும் கட்சி, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியினரின் அட்டகாசம், வீடு வீடாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14சதவிகிதம் அளவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...
சென்னை மாநகராட்சியில் குறைந்த ஓட்டுப்பதிவு எந்த கட்சிக்கு சாதகம்?- நிபுணர்கள் பரபரப்பு அலசல்
Next Story






