search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான 276 வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள்-போலீசார் தீவிர கண்காணிப்பு

    உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பதட்டமான 276 வாக்குச்சாவடிகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சிக்கான 60 வார்டுகளுக்கும், 6 நகராட்சி களுக்கான 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளுக்கான 470 வார்டுகளுக்கும் 1,514 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    முன்னதாக சேலம் மாவட்டத்தில்  276 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த  276 வாக்குச் சாவடிகளை கண்காணித்திட 138 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஒருவர், வட்டார பார்வையாளர்கள் 41 பேர் மற்றும் நுண்பார்வையாளர்கள் 138 பேர் நியமிக்கப்பட்டனர்.

    இன்று அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களை தவிர வேறு யாரையும் வாக்குப்பதிவு  கட்டிடத்திற்குள் அனுமதிக்க வில்லை. கூட்டம் கூடாமல் இருக்க வேண்டி வாக்காளர்களை வரிசைப்படுத்தி  அமைதியான முறையில் ஓட்டு போட நடவடிக்கைகள் எடுத்தனர்.

    வாக்குச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தல், வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நேரம், முடிவுற்ற நேரம் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் நடவடிக்கை மேற்கொண்டனர். 138 வாக்குச்சாவடி மையங்கள் நேரடி கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து  கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 

    பதட்டமான இந்த வாக்குச் சாவடிகளில்  கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு  நிறுத்தப்பட்டனர். சட்டம்- ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

    அவர்கள் வாக்குச்சாவடி மையம் முன்பு இரும்பு பேரிகார்டர் வைத்தும், ரோந்து பணியில் ஈடுபட்டும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×